8-1956

LINK

1.இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்

***2.
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்

பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே

தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே…
***
3.உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?

உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?
ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா
இரட்சகரே… இயேசுநாதா…
தேவையெல்லாம் நீர்தானய்யா

1. இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்

2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர்

3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்
***
4.நன்றி நன்றி என்று
நன்றி நன்றி என்று
நாள் முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்

காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மதியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்

உண்ணும் போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும் போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்

வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும் போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் – பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்

சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே

சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே

உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே
***
5.எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் – நான்

நன்றி ராஜா நன்றி ராஜா

தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்

பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடைக் கட்டினீர்

பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே

எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காக மீண்டும் வருவீர்

கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்

பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்

முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தனை ஜெயித்து விட்டீர்

நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
***
6.என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே

ஆனந்தமே எந்நாளுமே
அப்பா உம் சமூகத்திலே

புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்

புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர்

இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம்

நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய்
***
7.எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதான் தகப்பன் வீடு
நன்மைகள் பல செய்த
நல்லவர் இயேசுவுக்கு
நன்றி பாடல் பாடணும்
துதி பலிபீடம் கட்டணும்

ஆபத்து நாளிலே பதில் தந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்
நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
அதற்கு நன்றி சொல்வோம்

அப்பா தகப்பனே நன்றி நன்றி -2
எழுந்து பெத்தேல் செல்வோம்

போகுமிடமெல்லாம் கூடயிருந்து
காத்துக் கொள்வேனென்றீர்
சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும்
கைவிட மாட்டேனென்றீர்

பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
ஆதரித்த ஆயரே
ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
வணங்கிய எங்கள் தெய்வமே

எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
என்னை மீட்டீரையா
வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
நடத்தி வந்தீரையா

படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
என்று வாக்குரைத்தீரையா
பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம்
என்று வாக்குரைத்தீரையா

அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
அகற்றி புதைத்திடுவோம்
ஆடை மாற்றுவோம் தூய்மையாக்கும்வோம்
பாடிக் கொண்டாடுவோம்

வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
தெரிந்து கொண்டீர்
இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து
பலுகிப்பெருகச் செய்தீர்
***
8.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் -2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்

அல்லேலூயா (4)

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்)
புகழ் பாடி மகிழ்வதுதான் – 2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான் -2
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்
***
9.என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மை யாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே என்றும்
நன்மைகள் செய்பவரே

மனிதர் தூற்றும் போது உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

தனிமை வாட்டும் போது நல்
துணையாய் இருப்பவரே
உம் அவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

வாழ்க்கைப் பயணத்திலே
மேகத் தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே
***
10.எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே -என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே

உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன் ஐயா
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா

உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் நான்
அழைத்தீரே உம் சேவைக்கு என்னை
அதை நான் மறப்பேனோ

அப்பா உன் சந்நிதியில் தான்
அகமகிழ்ந்து களிகூருவேன் என்
எப்போது உம்மைக் காண்பேன் நான்
ஏங்குதய்யா என் இதயம்

என்தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்
***

11எக்காளம் ஊதிடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள் – தெருத்
தெருவாய் நுழைந்திடுங்கள்

சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைப்பிடித்து கிழித்திடுங்கள்

தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெயித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்

அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்
**
12.எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா
ஆவியானவரே ….. ஆவியானவரே….
பரிசுத்த ஆவியானவரே

எப்படி நான் ஜெபிக்க வேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே

கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே

எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே

எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கணைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்கள் நீக்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே
**
13.உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்

மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும் தூயோனே உமக்கே

ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒருபோதும் உம்மைப் பிரியேன்
மறுவாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்

என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில்தான்
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்

உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்
***
14.நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே

புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்

அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே
***
15.நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை

உம்மையல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே என்
நினைவெல்லாம் ஆள்பவரே

ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே

உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
நீரே என் தேவன் – உம்
நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே

மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே

உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா

எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே

உமது அன்பை அதிகாலையில்
காணச் செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே

அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே

 

16.எனது தலைவன் இயேசு ராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்துப் பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்

நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து துதித்து
நிம்மதி அடைவேன்

நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
நாளும் பின் தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்

பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே
***
17.என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்

அல்லேலூயா ஆனந்தமே

உன்னதர் மறைவில் வல்லவர்
நிழலில் என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்

தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்

வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு

இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்

தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்

***
18.உலர்ந்த எழும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்

அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா-இன்று

நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும்

சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்

தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

காலூன்றி நிற்ணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே

பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே

நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே

***
19.நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்

அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்
சமாதானம் தருகிறார் – உனக்கு

கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார் -இன்று

எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை -நாம்

நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் -இன்று
குறையெல்லாம் நீக்குவார் -உன்

நண்பனே கலங்காதே
நம்பிக்கை இழக்காதே
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை நிற்கிறார்

எத்தனை இழ்ப்புகள்
ஏமாற்றம் தோல்விகள்
கர்த்தரோ மாற்றுவார்
கரம் நிட்டித் தேற்றுவார்

என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார்


***
20.பரலோக தேவனே
பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது
ஏதுவுமில்லை-இந்த

எல்ஷடாய் -2
சர்வவல்லதெய்வமே

உயர்த்துகிறோம்
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

யேகோவா நிசியே வெற்றி
தந்த தெய்வமே

யேகோவா ரஃப்பா சுகம்
தந்த தெய்வமே

எல்ரோயீ -2
என்னைக் கண்ட தெய்வமே

***
21.பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம்

நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே

அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப் போகும்

கரையில்லாமல் குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்

அனுதினமும் ஜெபத்தில் விழித்திருப்போம்
அபிஷேக எண்ணெயால் நிரம்பிடுவோம்

***
22.உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே

ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே

உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே

பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கம் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே

வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே

ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே

***
23.உம்மை நான் போற்றுகிறேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வணங்குகின்றேன்

என்னைக் கைதூக்கி விட்டீர்
எதிரியின் மேல் வெற்றி தந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் தந்தீரய்யா – ஆஆ

புகழ்ந்து பாடுவேன் (வோம்)
மகிழ்ந்து கொண்டாடுவேன் (வோம்)

மாலைநேரம் அழுகையென்றால்
காலைநேரம் ஆனந்தமே
நொடிப்பொழுது உந்தன் கோபம்,
தயவோ வாழ்நாளெல்லாம்.

சாக்கு துணி களைந்து விட்டீர்,
மகிழ்ச்சி உடை உடுத்தி விட்டீர்
புலம்பலை நீக்கி விட்டீர்,
புதுப்பாடல் நாவில் வைத்தீர்

என் உள்ளம் புகழ்ந்து பாடும்,
(இனி) மௌனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமே,
கரம்பிடித்த மெய் தீபமே

மலைபோல் நிற்கச் செய்தீர்,
மாவேந்தன் உம் அன்பினால்
நிலைகலங்கி போனேன் ஐயா,
நின் முகம் மறைந்தபோது

புழுதி உம்மை புகழ முடியுமா?
சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
என் மீது இரங்கும் ஐயா,
எனக்குத் துணையாய் இரும்.

***
24.உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா

கரம் பிடித்து நடத்துகின்றீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்

நன்றி நன்றி – உம்மை

கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறீர்

நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே

இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே

வலுவூட்டும் திருஉணவே
வாழவைக்கும் நல்மருந்தே
***
25.உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்

என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ள நாளெல்லாம்

வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்

பட்டப்பகல்போல, (என்)
நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்,
உமக்காய்க் காத்திருப்பேன்

கோபங்கள், ஏரிச்சல்கள்
அகற்றி ஏறிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே,
நன்மைகள் செய்திடுவேன்

பாதத்தில் வைத்து விட்டேன்,
பாரங்கள், கவலைகள் – உம்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்திச் செல்வீர்

***
26.நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவார்
வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி

எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்

செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள்ன் கிடைத்துவிடும்

கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்

***
27.உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது

பாடல்கள் வைத்தீர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா

உந்தன் திருநாமம் அது
எவ்வளவு உயர்ந்தது -2

நிலாவைப் பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைந்து விசாரித்து
நடத்த (நான்) எம்மாத்திரமையா

வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்

அனைத்துப் படைப்புக்கள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்ப்படியச் செய்துள்ளீர்

***
28.உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே

கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்

கலங்கிடவே வேண்டாம்
என் இயேசு கைவிட மாட்டார்

நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார்

திராணிக்கும் மேலாக சோதிக்கப்பட
ஒரு நாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்

நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நம்

அக்கினியில் மேல் நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கிப் போக மாட்டாய்

***
29.நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீன்போகாது

நிச்சயமாகவே நிச்சயமாகவே

முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே

கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே

நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை

***
30.உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
நீரே என் தேவன் – உம்
நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே

மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே

உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா

எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே

உமது அன்பை அதிகாலையில்
காணச் செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உல் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்யநாதரே

அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே

 

***

31.என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்


பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி

பெலனே வாருமே

பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்

வல்லமையே வாருமே


தேற்றரவாளன் பரிசுத்த ஆவி

தேற்றிட வாருமே

ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்

ஆவியே வாருமே


வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்

வள்ளலே வாருமே

கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்

கருணையே வாருமே


கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்

சாந்தமே வாருமே

பாவங்கள் கழுவி பரிசுத்தமாக்கும்

பரமனே வாருமே


***

32.உம்மை நினைக்கும் போதெல்லாம்

நெஞ்சம் மகிழுதையா

நன்றி பெருகுதையா

 

தள்ளப்பட்ட கல் நான்

எடுத்து நிறுத்தினீரே

உண்மை உள்ளவன் என்று கருதி

ஊழியம் தந்தீரையா

 

நன்றி நன்றி ராஜா

நன்றி இயேசு ராஜா

 

பாலை நிலத்தில் கிடந்தேன்

தேடிக் கண்டு பிடித்தீர்

கண்ணின் மணிபோல காத்து வந்தீர்

கழுகு போல் சுமக்கின்றீர்

 

பேரன்பினாலே என்னை

இழுத்துக் கொண்டீர்

பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்

உம் பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்

 

இரவும் பகலும் கூட

இருந்து நடத்துகின்றீர்

கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி

கண்ணீர் துடைக்கின்றீர்

 

உந்தன் துதியைச் சொல்ல

என்னைத் தெரிந்து கொண்டீர்

உதடுகளைத் தினம் திறந்தருளும்

புது ராகம் தந்தருளும்

 

சிநேகம் பெற்றேன் ஐயா

கனம் பெற்றேன் ஐயா

உந்தன் பார்வைக்கு அருமையானேன்

உம் ஸ்தானாதிபதியானேன்

 

உலக மகிமையெல்லாம்

உமக்கு ஈடாகுமோ

வானம் பூமியெல்லாம் ஓழிந்து போகும்

உம் வார்த்தையோ ஓழியாதையா

***

33.கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

காரியம் வாய்க்கச் செய்தாரே

எத்தனை எத்தனை நன்மைகளோ

இயேசப்பா செய்தாரே – நான்

 

இறுதிவரை என் வாழ்வு

இயேசப்பா உமக்குத்தானே

 

கால்கள் தள்ளாட விடமாட்டார்

காக்கும் தேவன் உறங்க மாட்டார்

இஸ்ராயேலைக் காக்கிறவர்

எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி

 

கர்த்தர் என்னைக் காக்கின்றார்

எனது நிழலாய் இருக்கின்றார்

பகலினிலும், இரவினிலும்

பாதுகாக்கின்றார்

 

போகும் போதும் காக்கின்றார்

திரும்பும் போதும் காக்கின்றார்

இப்போதும், எப்போதும்

எந்நாளும் காத்திடுவார்

34

கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)
கர்த்தரைத் துதிக்கின்றேன்
பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி
நான் வலம் வருகின்றேன்

கர்த்தாவே உம் பேரன்பு
எப்போதும் என் கண் முன்னே
வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ
அர்ப்பணித்தேன் – உம்

ஆராதனை ஆராதனை
ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

அறுவடையின் எஜமானனே,
அரணான(என்) அடைக்கலமே
அல்பாவும் ஒமேகாவும்,
தொடக்கமும் முடிவும் நீரே

இரக்கங்களின் தகப்பனே,
இளவயதின் வழிகாட்டியே
ஜீவிக்கின்ற மெய்தேவனே,
ஜீவனின் அதிபதியே

நித்தியானந்த சக்ராதிபதி
நீர் ஒருவரே மாவேந்தர்
அரசர்க்கெல்லாம் அரசர் நீர்
பேரின்பக் கடவுள் நீரே

மகா மகா நீதிபார்,
மகத்துவங்கள் நிறைந்தவர்
மீட்பளிக்கும் வல்லமையே,
சாவாமை உள்ளவரே

எல்லாருக்கும் நீதிபதி,
சர்வத்தையும் உருவாக்கினீர்
சகல கிருபையும் நிறைந்தவர்
சத்தியமானவரே

உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர்,
நன்மைகளின் பிறப்பிடமே
யோனாவிலும் பெரியவரே,
பிரதான மேய்ப்பர் நீரே

 

35

நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே

வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்

உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து உம்
வார்த்தையால் வாழ்கின்றேன்

இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்

நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் -என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்

 

36

நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே

நன்றி -2 எல்லாம் நன்மைக்கே நன்றி

தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்பங்களை இன்பமாக மாற்றினீர்

சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி

உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்

என் கிருபை உனக்குப்போதும் என்றீர்
பெலவினத்திலே பெலன் என்றீர்

தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி

விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி

கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

 

37

துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால்

குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே)

எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர்
எரிந்து கொண்டிருப்பேன்
எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை

எரிந்து கொண்டேயிருப்பேன்
எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்)

நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா
தூயவர் தூயவர்
துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா

தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே)

சேனைக்குள் பாய்ந்தேன்
உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன்
புகழ்ந்து பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்

புகழ்ந்து பாடிடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
(புகழ்ந்து பாடிடுவேன்)

 

38

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கின்றேன்

ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன்

தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது

இரட்சகரே உம் வருகையிலே
நிச்சயமாய் உம்முகம் காண்பேன்
தாகமாய் இருக்கின்றேன்
அதிகமாய் துதிக்கின்றேன் – எப்பொழுது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி – இரட்சகரே

காலைதோறும் உம்பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

 
39

உம் நாமம் உயரணுமே
உம் அரசும் வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே

அப்பா பிதவே அப்பா

அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா

பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே

சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா

ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்

ஜாதிகள் ஒழியணும் சண்டைக ஓயணும்
சமாதானம் வரணுமே

ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே

ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா

என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே

அரசியல் தலைவர்கள் M.L.A., M.P க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே

 
40

நீதிமான் நான் நீதிமான் நான்
இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் -இயேசுவின்

பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன்
கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
முதிர்வயதிலும் நான் கனிதருவேன்

காலையிலே உம் கிருபையையும்
இரவினிலே உம் சத்தியத்தையும்
பத்து நரம்புகள் இசையோடு
பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்

ஆண்டவனே என் கற்பாறை
அவரிடம் அநீதியே இல்லை
என்றே முழக்கம் செய்திடுவேன்
செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்

ராஜாவின் ஆட்சி வருகையிலே
கதிரவனைப் போல் பிரகாசிப்பேன்-இயேசு
ஆகாயமண்டல விண்மீனாய்
முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன்

எதிரியின் வலிமையை மேற்கொள்ள
அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
புதுஎண்ணை அபிஷேகம் என் தலைமேல்
பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்

கர்த்தரின் கண்கள் என்மேலே
என் வேண்டுதல் கேட்கின்றார்
மன்றாடும்போது செவிசாய்த்து
மாபெறும் விடுதலை தருகின்றார்

 
41

கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உம்மோடு கூட நடந்திடுவேன் 
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல் 

நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா

ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை

உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்

42

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

 
43

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே

பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்.

அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்து விட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்து விட்டாய்

ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்று
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்

ஆபிரகாம் சாராள் குழந்தை பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்- உன்

கட்டாந்தரையிலே நடப்பதுபோல்
கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
எழுநாள் ஊர்வலம் வந்ததினால்

உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்

மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே

நம்பிக்கையினால் நாம் வாழ்வு பெறுவோம்
நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
பயம் இல்லையே திகில் இல்லையே
படைத்தவர் நம்மை நடத்திச் செல்வார்.

 
44

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் -2
உயிருள்ள நாளெல்லாம்

இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை, அன்பு
நிறைந்து வாழ்பவரே

துதி கன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

உலகத் தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புது வாழ்வு தந்து விட்டீர்

45

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே -எனக்கு

உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே -தினமும்

அதிசயமானவரே
ஆலோசனைக் காத்தரே
வல்லமையுள்ள தேவா
வரங்களின் மன்னவனே -எல்லா

கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே -இயேசு

மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் -அவர்

 
46

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம்

உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமுகமே
தினம் எனக்குத் தீபமே

நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன்
என்னை மறக்கின்றேன்

 
47

மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ

ஆராதனை ஆராதனை என்
அன்பர் இயேசுவுக்கே

1.விலையேற்ப் பெற்ற உம் இரத்ததால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

2.வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

3.எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

4.உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ

 
48

உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா அல்லேலூயா

தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே

வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே

வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்

கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே

 
49

என் தகப்பன் நீர்தானையா
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

எப்போதும் எவ்வேளையும் -உம்
கிருபை என்னைத் தொடரும்

மாண்புமிக்கவர் நீர்தானே
மிகவும் பெரியவர் நீர்தானே

உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றி
உம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடு
உயிருள்ள நாளெல்லாம் (2) – என் தகப்பன்

தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்
விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே

ஏற்ற வேளையில் அனைவருக்கும்
ஆகாரம் நீர் தருகின்றீர்

சகல உயிர்களின் விருப்பங்களை
திருப்தியாக்கி நீர் நடத்துகிறீர்

நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்
தகப்பன் அருகில் இருக்கின்றீர்

அன்பு கூருகின்ற அனைவரையும்
காப்பாற்றும் தெய்வம் நீர்தானே

துதிக்குப் பாத்திரர் நீர் தானே
தூயவரும் நீர் தானே

இரக்கமும் கனிவும் உடையவரே
நீடிய சாந்தம் உமதன்றோ

 
50

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா

தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்

வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே

கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்

அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

 

 வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

வெற்றி உண்டு வெற்றி உண்டு

என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றி பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்-இயேசு

பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

பல்லவி

 

    ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்

    ஆண்டவரைத் தொழுதேத்து இந்நாள் அள

    வன்பு வைத் தாதரித்த - உன்

    ஆண்டவரைத் தொழு தேத்து

 

    சரணங்கள்

 

  1. 1. போற்றிடும் வானோர் பூதலத் துள்ளோர்

    சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்துமமே

 

  1. 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத

    உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்துமமே

 

  1. 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான

    வினை பொருத்தருளும் மேலான - ஆத்துமமே

 

  1. 4. வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த

    ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்துமமே

 

  1. 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்

    முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே

 

  1. 6. துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே!

    இதயமே உள்ளமே என் மனமே - ஆத்துமமே


01
02
03
04
05

06
07
08
09
10

11
12
13
14
15


NEXT

NEXT-2Dx4D
WORD

No comments:

Post a Comment