Saturday, July 18, 2020

01.

  01     02     03     04     05     06     07     08     09     10  
  11     12     13     14     15     16     17     18     19     20  

1.The Lion and the Mouse

Once when a lion, the king of the jungle was asleep, a little mouse began running up and down on him. This soon awakened the lion, who placed his huge paw on the mouse, and opened his big jaws to swallow him.

"Pardon, O King!" cried the little mouse. "Forgive me this time. I shall never repeat it and I shall never forget your kindness. And who knows, I may be able to do you a good turn one of these days!", the mouse said. The lion was so tickled by the idea of the mouse being able to help him that he lifted his paw and let him go.

Sometime later, a few hunters captured the lion, and tied him to a tree. After that they went in search of a wagon, to take him to the zoo.

Just then the little mouse happened to pass by. On seeing the lion's plight, he ran up to him and gnawed away the ropes that bound him, the king of the jungle. "Was I not right?" said the little mouse, The lion also agreed.

MORAL: Small acts of kindness will be rewarded greatly.



சிங்கமும் எலியும்

ஒரு முறை காட்டின் ராஜாவான சிங்கம் தூங்கி கொண்டிருந்தபோது, ஒரு சிறிய சுண்டெலி அதன் மேலும் கீழும் ஏறி விளையாட ஆரம்பித்தது. இது விரைவில் சிங்கத்தை எழுப்பியது, சிங்கம் தனது பெரிய பாதத்தை சுண்டெலியின் மீது வைத்து, அதனை விழுங்க தன் பெரிய வாயை திறந்தது.

"அரசரே! என்னை மன்னித்துவிடுங்கள்" என்று சுண்டெலி அழுதது. "இந்த முறை மட்டும் நீங்கள் என்னை மன்னியுங்கள். நீங்கள் என்னை மன்னித்து விட்டால் உங்களுடைய அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், யாருக்கு தெரியும் என்றாவது என்னால் உங்களுக்கு ஒரு நல்லது நடக்கலாம், எனவே என்னை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சியது. சிங்கமும் சற்று யோசித்து விட்டு இதனால் கூட நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் என்று எண்ணி தனது பாதத்தைத் தூக்கி அதை விடுவித்தது.

சில நாட்கள் கழித்து, ஒரு சில வேட்டைக்காரர்கள் சிங்கத்தை பிடித்து, ஒரு மரத்தில் கட்டிவிட்டு, பிறகு அவர்கள் சிங்கத்தை மிருகக்காட்சிசாலைக்கு எடுத்துச் செல்ல வண்டியை தேடி சென்றனர்.

அப்போது அந்த வழியாக அந்த சுண்டெலி கடந்து சென்றபோது, சிங்கத்தின் துன்பத்தைக் கண்டு, அவரிடம் ஓடி, கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டது. சுண்டெலி சிங்கத்திடம் "நான் சொன்னது சரி அல்லவா என்றது?". சிங்கமும் அதை ஒப்புக் கொண்டது.

நீதி : சிறிய இரக்க செயல்களுக்கு கூட, பெரிய வெகுமதி கிடைக்கும்.

2.Three Sons and a Bundle of Sticks

Once upon a time, an old man lived with his three sons in a village. The three sons were hard workers. The old man tried a lot to unite them but he failed.

Months passed by and the old man fell sick. He told his sons to stay united, but they didn't listen to him. So, he decided to teach them a practical lesson.

The old man called his sons. He told them, I will give you a bundle of sticks. Separate each stick and you will have to break each stick into two. The one who breaks the sticks quickly will be rewarded more. The sons agreed.

The old man gave a bundle of 10 sticks to each of them and asked them to break each stick into pieces. They broke the sticks into pieces in minutes.And again they started to quarrel among themselves as to who came first.

The old man said, "Dear sons, the game is not over. Now I will give another bundle of sticks to each of you. You will have to break the sticks as a bundle, not as separate sticks".

The sons agreed and tried to break the bundle of sticks. Though they tried their best, they could not break the bundle. They failed to complete the task.

The three sons reported their failure to their father.

The old man replied, "Dear sons, See! You could easily break the single sticks into pieces, but you were not able to break the bundle! So, if you stay united, nobody can do any harm to you. If you quarrel every time with your brothers, anyone can easily defeat you. I request you to stay united".

The three sons understood the power of unity and promised their father that whatever be the situation, they would all stay together.

Moral : Unity is Strength.


மூன்று மகன்களும் ஒரு கட்டு குச்சியும்

ஒரு காலத்தில் ஒரு வயதான முதியவர் தனது மூன்று மகன்களுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். இந்த மூன்று மகன்களுமே கடின உழைப்பாளர்கள், ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. முதியவரும் பலமுறை அவர்களை ஒன்றுபடுத்த முயற்சித்தார் ஆனால் அவரால் முடியவில்லை.

மாதங்கள் ஓடின, முதியவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது, அவர் தனது மகன்களை ஒற்றுமையாக இருக்க சொன்னார், ஆனால் அவரின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. ஆகையால் அவர் ஒரு நடைமுறை பாடத்தை கற்பிக்க முடிவு செய்தார்.

உடனே முதியவர் தனது மகன்களை அழைத்து, "நான் உங்களுக்கு ஒரு கட்டு குச்சியைக் கொடுப்பேன். ஒவ்வொரு குச்சியையும் தனியாக எடுத்து இரண்டாக உடைக்க வேண்டும். அதிக குச்சிகளை உடைப்பவர் பரிசு பெறுவார்" என்று கூற மகன்களும் ஒப்புக்கொண்டனர்.

அந்த முதியவர் தலா 10 குச்சிகளைக் கொண்ட கட்டுகளைக் கொடுத்தார், ஒவ்வொரு குச்சியையும் துண்டுகளாக உடைக்கச் சொன்னார். அவர்கள் குச்சிகளை நிமிடங்களில் துண்டுகளாக உடைத்தனர். முதலில் யார் வந்தார்கள் என்று அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தார்கள்.

இதைப் பார்த்த முதியவர் விளையாட்டு இன்னும் முடியவில்லை, மீண்டும் உங்களிடம் ஒரு கட்டு குச்சிகளை கொடுப்பேன், அவற்றை பிரிக்காமல் அப்படியே முழுவதுமாக உடைத்து காட்ட வேண்டும் என்று கூறினார். மூவரும் முயற்சி செய்தனர், ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

மூன்று மகன்களும் தங்கள் தோல்வியை தங்கள் தந்தையிடம் தெரிவித்தனர்.

முதியவர் மகன்களிடம், "அன்பு மகன்களே! நீங்கள் ஒரு குச்சியை துண்டு துண்டாக உடைக்கலாம், ஆனால் கட்டு குச்சிகளை ஒன்றாக உடைக்க முடியாது. அது போல தான் நீங்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்தால் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது, ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மற்றவர்கள் உங்களை எளிதில் தோற்கடித்து விடுவார்கள்" என்று கூறினார்.

மூன்று மகன்களும் ஒற்றுமையின் பலத்தை புரிந்துகொண்டு, நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருப்போம் என்று தந்தைக்கு உறுதியளித்தனர்.

நீதி : ஒற்றுமையே பலம்.

3.A Hole in the Wall

In a small village, a little boy lived with his father and mother. The boy used to get angry very soon and taunt others with his words. He scolded kids, neighbours and even his friends due to anger. His friends and neighbours avoided him, and his parents were really worried about him.

His mother and father advised him many times to control his anger and develop kindness. Unfortunately, all their attempts were failed. Finally, the boy's father came up with an idea.

One day, his father gave him a huge bag of nails. He asked his son to hammer one nail to the wall when he gets angry.

Every time he lost his temper, he ran to the wall and hammered a nail. He hammered 30 nails on the first day! After the next few days, gradually, the number of nails hammered to the wall was reduced.

Now, his father told him to remove the nails each time the boy controlled his anger. Several days passed and the boy was able to pull out most of the nails from the wall. However, there remained a few nails that he could not pull out.

The father appreciated him and asked him pointing to a hole, What do you see there? The boy replied, "a hole in the wall!"

He told the boy, "You can stab a man with a knife, and say sorry later, but the wound will remain there forever. Your bad temper and angry words were like that! Words are more painful than physical abuse! Use words for good purposes".

Moral - Unkind words cause lasting damage. Let our words be kind and sweet.

சுவரில் உள்ள துளை

ஒரு சிறிய கிராமத்தில், ஒரு பையன் தனது தந்தையுடனும் தாயுடனும் வாழ்ந்து வந்தான். சிறுவன் மிக விரைவில் கோபமடைந்து மற்றவர்களை தனது வார்த்தைகளால் கேலி செய்வான். அவன் கோபத்தினால் குழந்தைகளையும், அண்டை வீட்டாரையும், அவரது நண்பர்களையும் கூட திட்டுவான். இதனால் அவனது நண்பர்களும், அண்டை வீட்டாரும் ஒதுக்க ஆரம்பித்தனர். அவனுடைய பெற்றோர் அவனைப் பற்றி உண்மையிலேயே கவலைப்பட்டனர்.

அவனது தாயும் தந்தையும் அவனது கோபத்தைக் கட்டுப்படுத்தவும், அன்பை வளர்த்துக் கொள்ளவும் பல முறை அறிவுறுத்தினர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இறுதியாக, சிறுவனின் தந்தை ஒரு யோசனையுடன் வந்தார்.

ஒரு நாள், அவனுடைய தந்தை அவனுக்கு ஒரு பெரிய பையில் ஆணிகளை கொடுத்தார். ஒவ்வொரு முறையும் கோபம் வரும்போது சுவரில் ஒரு ஆணியை அடிக்குமாறு தனது மகனிடம் கூறினார்.

ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது, அவன் சுவரில் ஆணியை அடிக்க ஆரம்பித்தான். முதல் நாளில் அவன் 30 ஆணிகளை அடித்தான். அடுத்த சில நாட்களுக்குப் பிறகு, படிப்படியாக சுவற்றில் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

தற்போது சுவற்றிலுள்ள ஆணிகளை ஒவ்வொரு முறையும் கோபத்தை பொருத்துக்கொள்ளும் போதும் அகற்றும்படி அவனுடைய அப்பா அவனிடம் சொன்னார். பல நாட்கள் கழிந்தன, சிறுவன் சுவற்றில் உள்ள ஆணிகளை பெரும்பாலானவையை அகற்ற முடிந்தது. இருப்பினும், அவனால் அகற்ற முடியாத சில ஆணிகள் இருந்தது.

தந்தை அவரை பாராட்டினார், ஒரு துளையை சுட்டிக்காட்டி, "நீ அங்கு என்ன பார்த்தாய்?" என்று மகனிடம் கேட்டார், "சுவரில் ஒரு துளை உள்ளது" என சிறுவன் பதிலளித்தான்.

இதே போல தான் உன்னுடைய கோபமும், உன்னுடைய வார்த்தைகளும். கத்தியால் ஒருவரைக் குத்த முடியும், அவர் உன்னை மன்னிக்கலாம், ஆனால் உள்ளுக்குள்ளே ஏற்பட்ட காயம் எப்போதும் ஆராது. உடல் ரீதியான கஷ்டங்களை விட வார்த்தைகள் மிகவும் வேதனைக்குரியவை! நல்ல நோக்கங்களுக்காக வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் என்று கூறினார்.

நீதி : இரக்கமற்ற வார்த்தைகள் நீடித்த பாதிப்பைக் கொண்டுவருகின்றன. நாம் பேசும் வார்த்தைகள் எப்போதும் கனிவானதாகவும் இனிமையாகவும் இருக்கட்டும்.

4.Help of Sankar

Once there was a small boy named Shankar in a village. He belonged to a poor family. One day, he was crossing through the forest and carrying some woods. He saw an old man who was very hungry. Shankar wanted to give him some food, but he did not have food. So he continued on his way. On his way, he saw a deer who was very thirsty. He wanted to give him some water, but he did not have water. So he went on his way ahead.

Then he saw a man who wanted to make a camp but he did not have woods. Shankar asked his problem and gave some woods to him. In return, he gave him some food and water. Now he went back to the old man and gave him some food and gave some water to the deer. The old man and the deer were very happy. Shankar then happily went on his way.

However, one day Shankar fell down. He was in pain but he couldn't move and no one was there to help him. But, the old man who he had helped before saw him, had quickly came and helped him. He had many wounds on his legs. The deer whom shankar had given water saw his wounds and quickly went to the forest and brought some herbs. After some time his wounds were covered. All were very happy that they were able to help each other.

Moral: If you help others, then they will also help you.

சங்கரின் உதவி

ஒரு கிராமத்தில் ஷங்கர் என்ற ஒரு சிறிய பையன் இருந்தான். அவன் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு நாள், அவன் காடு வழியாக சில மரகட்டைகளை ஏந்திச் சென்றான். அப்போது அவன் மிகவும் பசியாக இருந்த ஒரு வயதான மனிதனை பார்த்தான். ஷங்கர் அவருக்கு உணவை கொடுக்க விரும்பினான், ஆனால் அவருக்கு தேவையான உணவு அவனிடம் இல்லை. எனவே அவன் தனது வழியை தொடர்ந்தான். மீண்டும் அவனது வழியில், மிகவும் தாகமாக இருந்த ஒரு மானைப் பார்த்தான். அவன் அதற்கு தண்ணீர் கொடுக்க விரும்பினான், ஆனால் அவனிடம் தண்ணீர் இல்லை. எனவே அவனது வழியில் சென்றான்.

பின்னர், கூடாரம் அமைக்க விரும்பும் மனிதனை பார்த்தான். ஆனால் அந்த மனிதனிடம் மரகட்டைகள் இல்லை. ஷங்கர் அந்த மனிதனின் குறைகளை கேட்டு அவருக்கு சில மரகட்டைகளை கொடுத்தான். அதற்கு பதிலாக அந்த மனிதன் சிறிது உணவுகளையும் தண்ணீரையும் ஷங்கருக்கு வழங்கினான். ஷங்கர் இப்போது அவனுக்கு வழங்கப்பட்ட உணவுகளையும் தண்ணீரையும் திரும்பப் போய் அந்த வயதான மனிதருக்கு உணவையும், மானுக்கு தண்ணீரையும் கொடுத்தான். வயதான மனிதனும், மானும் மிக மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் ஷங்கர் மகிழ்ச்சியுடன் தனது வழியில் சென்றான்.

ஒரு நாள் ஷங்கர் கீழே விழுந்துவிட்டான், அவன் மிகுந்த வலியில் இருந்தான், அவனால் நகரக் கூட முடியவில்லை, அவனுக்கு உதவவும் யாரும் அங்கு இல்லை. அப்போது அவன் உதவிய வயதான முதியவர் ஷங்கரைப் பார்த்தவுடன் வந்து உதவி செய்தார். ஷங்கரின் காலில் அதிக காயங்கள் இருந்தது. ஷங்கர் தண்ணீர் கொடுத்த மான் அவரது காயங்களைக் கண்டு விரைவாக காட்டுக்குச் சென்று சில மூலிகைகள் கொண்டு வந்தது. சில நேரம் கழித்து அவரது காயங்கள் ஆற்றப்பட்டன. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

நீதி : நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தால், அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்

5.Sam - A greedy and selfish man

Sam was a greedy and selfish man. He always desired to have lots of money. He paid very low wages to his servants. However, one day, he learned a lesson that changed his life forever.

A small bag that belonged to Sam was missing. The bag had 50 gold coins in it. Sam and his friends searched for the bag, but they couldn't find it.

After a couple of days, the ten year old daughter of a man working for Sam found the bag. She told her father about it. Her father decided to take it to his master. He gave the bag back to his master Sam, and asked him to check whether the bag had 50 gold coins. Sam checked out and decided to play a trick. He shouted at his worker, "there were 75 gold coins in this bag but you gave me only 50! Where are the other coins? You have stolen them!" The worker was shocked and they decided to take the issue to court.

The judge heard both the sides. And understood the intrigue within it. And then judge made his judgment.

"Since Sam lost a bag of 75 gold coins and the bag found by the girl had only 50 coins, it is obvious that the bag that was found does not belong to Sam. It was lost by someone else. If anyone finds a bag of 75 gold coins, I will declare that it belongs to Sam. As there are no complaints about the loss of 50 coins, I order the girl and his father to take those 50 coins as a reward of appreciation for their honesty!"

Moral : Honesty will always be rewarded and greedy will be punished!

சாம் - பேராசை மற்றும் சுயநலம் கொண்ட மனிதன்

சாம் ஒரு பேராசை கொண்ட சுயநலவாதியாவார். அவர் எப்போதும் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புவார். அவர் தம் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பலத்தையே அளித்து வந்தார். இருப்பினும், ஒரு நாள், அவர் தன் வாழ்க்கையை மாற்றிய ஒரு பாடத்தை கற்றுக்கொண்டார்.

சாமுக்கு சொந்தமான ஒரு சிறிய பை காணவில்லை. பையில் 50 தங்க நாணயங்கள் இருந்தன. சாம் மற்றும் அவரது நண்பர்கள் பையைத் தேடினார்கள், ஆனால் அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, சாமிடம் பணிபுரியும் ஒரு மனிதனின் பத்து வயது மகள் பையை கண்டுபிடித்தாள். அவள் அதைப் பற்றி தன் தந்தையிடம் சொன்னாள். அவளுடைய தந்தை அதை தனது எஜமானரிடம் எடுத்துச் செல்ல முடிவு செய்தார். அவர் தனது எஜமானர் சாமுக்கு பையைத் திருப்பிக் கொடுத்தார், மேலும் அந்த பையில் 50 தங்க நாணயங்கள் இருக்கிறதா என்று சோதிக்கச் சொன்னார். சாம் சோதனை செய்துவிட்டு, ஒரு தந்திரத்தை விளையாட முடிவு செய்தார். அவர் தனது தொழிலாளியிடம், "இந்தப் பையில் 75 தங்க நாணயங்கள் இருந்தன, ஆனால் நீங்கள் எனக்கு 50 மட்டுமே கொடுத்தீர்கள்! மற்ற நாணயங்கள் எங்கே? நீங்கள் அவற்றைத் திருடிவிட்டீர்கள்!" என்று கூச்சலிட்டார். இதைக் கேட்ட தொழிலாளி அதிர்ச்சியடைந்தார், இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தார்.

நீதிபதி இரு தரப்பையும் விசாரித்தார். மேலும் அதற்குள் இருக்கும் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டார். பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.

"சாம் 75 தங்க நாணயங்கள் கொண்ட ஒரு பையை இழந்ததால், சிறுமி கண்டுபிடித்த பையில் 50 நாணயங்கள் மட்டுமே இருந்ததால், கண்டுபிடிக்கப்பட்ட பை சாமுக்கு சொந்தமில்லை என்பது தெளிவாகிறது. அந்தப் பையை வேறு யாரோ இழந்துள்ளனர். 75 தங்க நாணயங்கள் கொண்ட பையை யாராவது கண்டுபிடித்தால், அது சாமுக்கு சொந்தமானது என்று அறிவிப்பேன். 50 நாணயங்களை இழந்தது குறித்து எந்த விதமான புகாரும் இல்லாததால், அந்த 50 நாணயங்களையும் அவர்களின் நேர்மையைப் பாராட்டி வெகுமதியாக அந்தப் பெண்ணையும் அவரது தந்தையையும் எடுத்துச் செல்லுமாறு கட்டளையிடுகிறேன்," என்று கூறினார்.

நீதி : நேர்மைக்கு எப்போதும் பரிசு அளிக்கப்படும், பேராசை தண்டிக்கப்படும்!

6.True Wealth

Once upon a time, there lived a very rich man in a big town. He led a luxurious life. His son was studying in a distant city and he returned home for vacation. The rich man wanted to show off to his son how rich he was. But his son wasn't fond of any luxurious lifestyle. Rich man planned a day's visit to the entire town to show him the life of the poor people. The father and the son took a chariot and visited the entire town. They returned home after two days.

The rich man asked his son, "what did you learn from the trip". The son was silent. "Finally you have realized how the poor suffer and how they actually live," said the father. No father, replied the son. The father was very shocked and asked why he was saying like this.

He added, We have only two dogs, they have 10 dogs. We have luxurious and expensive lights imported from various countries, but they have countless stars lighting their nights. If we need food, we have to buy food from them, but they are so rich that they can cultivate their own food. The rich father was stunned and speechless, on hearing his son's words.

Finally the son said, "Dad, thank you so much for showing me who is rich and who is poor. Thank you for letting me understand how poor we really are!"

Moral : True wealth is not measured by money and property! True wealth is created in good friendships and compassionate relationships.


உண்மையான செல்வம்

ஒரு காலத்தில், ஒரு பெரிய நகரத்தில் மிகவும் பணக்காரர் வாழ்ந்தார். அவர் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரது மகன் ஒரு தொலைதூர நகரில் படித்துவிட்டு விடுமுறைக்கு வீட்டிற்கு திரும்பினார். அந்த மனிதர் தான் எப்படிப்பட்ட பணக்காரர் என்பதை தன் மகனுக்கு காட்ட விரும்பினார். ஆனால் அவரது மகன் எந்த ஆடம்பரமான வாழ்க்கையையும் விரும்பாத நபர். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை காட்ட முழு நகரத்தையும் சுற்றி பார்க்க திட்டமிட்டனர். தந்தை மற்றும் மகன் இருவரும் ஒரு தேரை எடுத்துக் கொண்டு முழு நகரத்தையும் பார்வையிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.

செல்வந்தர் தன் மகனிடம், "இந்தப் பயணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? என்று கேட்டார். மகன் அமைதியாக இருந்தான்.

"கடைசியாக ஏழைகள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள், அவர்கள் உண்மையில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்தாயா?" என்று அப்பா கேட்டார். இல்லை என்று மகன் பதிலளித்தான். தந்தை மிகவும் அதிர்ச்சி அடைந்து ஏன் இப்படி சொல்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு மகன், நம்மிடம் 2 நாய்கள் மட்டுமே உள்ளது, ஆனால் அவர்களிடம் 10 நாய்கள் உள்ளது. நம்மிடம் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த விளக்குகள் உள்ளன. ஆனால் அவர்கள் எண்ணற்ற நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் உள்ளனர். நமக்கு உணவு தேவை என்றால் நாம் அவர்களிடமிருந்து உணவை வாங்க வேண்டும், ஆனால் அவர்கள் தங்களுக்கான உணவை தாங்களே பயிரிடுகின்றனர். பணக்கார தந்தை அவரது மகனின் வார்த்தைகளைக் கேட்டபோது வியப்படைந்தார்.

கடைசியாக மகன், "அப்பா! செல்வந்தர் யார்? ஏழை யார்?" என்பதை எனக்கு காட்டியதுக்கு மிகவும் நன்றி. நாம் உண்மையில் எவ்வளவு ஏழ்மையானவர்கள் என்பதை எனக்கு உணர்த்தியதற்கு நன்றி" என்று கூறினார்.

நீதி : உண்மையான செல்வம் என்பது பணம் மற்றும் சொத்தை வைத்து அளவிட முடியாது. உண்மையான செல்வம் என்பது நல்ல நட்பு மற்றும் இரக்கமுள்ள உறவுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

7.The lamp of the blind

Once upon a time, there was a small town. There lived a blind man by himself who couldn't see. Yet, he carried a lighted lamp with him whenever he went out at night.

One night as he was coming home after having a dinner outside, he came across a group of young travelers. They saw that he was blind, yet carrying a lighted lamp. They started passing comments on him and made a fun of him. One of them asked him, "Hey Man! You are blind and unable to see anything! Why do you carry the lamp than?!"

The blind man replied, "Yes, unfortunately, I am blind and I can't see anything but a lighted lamp which I am carrying is for the people like you who can see. You may not see the blind man coming and end up pushing me. That is why I carry a lighted lamp'.

The group of travelers felt ashamed and apologized for their behavior.

Moral: We should think before judging others. Always be polite and learn to see things from others point of view.


பார்வையற்றவரின் விளக்கு

முன்னோரு காலத்தில், ஒரு சிறிய நகரத்தில் ஒரு பார்வையற்ற மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பார்வையற்றவராக இருந்ததால், இரவில் எங்கு சென்றாலும் ஒரு விளக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது.

ஒரு நாள் இரவில் வெளியில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இளைஞர்களின் பட்டாளத்தை கடந்து வந்தார். அவர் குருடராக இருப்பதையும், அவர் கிளக்கு ஏந்தி வந்ததையும் அவர்கள் கண்டார்கள். அப்போது அந்த இளைஞர்கள் அந்த மனிதர் பார்வையற்றவராக இருப்பதை கண்டு கேலி செய்ய ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவன் "நீ குருடனாய் இருக்கிறாய், எதையும் உன்னால் பார்க்க முடியாது! ஏன் நீ விளக்கு ஏந்திக் கொண்டிருக்கிறாய்?" - என்று அந்த மனிதனிடம் கேட்டான்.

ஆமாம் நான் குருடன் தான், என்னால் எதையும் பார்க்க முடியாது, ஆனால் நான் ஏந்திச் செல்லும் விளக்கின் ஒளியில் மற்றவர்களால் என்னை பார்க்க முடியும் அல்லவா? அப்போது யாரும் என் மீது வந்து மோத மாட்டார்கள், அதனால் தான் நான் இந்த விளக்கை ஏந்திச் செல்கிறேன் என்று கூறினார்.

இதை கேட்ட இளைஞர்கள் தங்கள் செயலை உணர்ந்து வெக்கப்பட்டு அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டனர்.

நீதி : ஒருவரை மதிப்பிடுவதற்கு முன்பே யோசிக்க வேண்டும். எப்போதும் கண்ணியமாகவும் மற்றவர்களுடைய பார்வையில் இருந்து விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

8.Ant and Grasshopper

Once upon a time, there was a grasshopper and an ant in a forest. They were close friends. It was springtime and the grasshopper was having a lot of fun playing in the sun light. But the ant was hard worker. It was collecting food grains and storing them in its house for the winter.

The grasshopper did not understand why the ant was doing so much hard work and keeping for winter. He asked, Why don't you come outside and play with me? The ant replied, "I cann't., I am storing food for the winter when there won't be anything to eat!". The grasshopper only laughed at the ant and said, "Why are you worrying now about thinking of winter? There is plenty of food!" and continued to play, while the ant worked hard.

When winter came, the grasshopper did not find a single grain of food to eat. It began to starve and feel very weak. The grasshopper saw how the hardworking ant had plenty of food to eat and realized its foolishness.

Moral : Make hay while the sun shines.!

எறும்பும் வெட்டுக்கிளியும்

ஒரு காலத்தில், காட்டில் ஒரு வெட்டுக்கிளியும் எறும்பும் வாழ்ந்து வந்தது. இருவரும் நெருங்கிய நண்பர்கள். அது ஒரு வசந்த காலம், வெட்டுக்கிளி சூரிய ஒளியில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது, ஆனால் எறும்பு கடின உழைப்பாளி. குளிர் காலத்துக்கு தேவையான தானியங்களை எறும்பு சேகரித்து வைத்தது.

எறும்பு ஏன் இவ்வளவு கடினமாக உழைத்து தானியங்களை சேகரிக்கிறது என்று வெட்டுக்கிளிக்கு புரியவில்லை. வெட்டுக்கிளி எறும்பிடம், "ஏன் நீ என்னுடன் வெளியே வந்து விளையாடுவதில்லை" என்று கேட்டது. எறும்பு, "என்னால் முடியாது. குளிர் காலத்தில் சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காது, அதனால் தான் நான் உணவு சேகரிக்கிறேன்" என்றது. இதைக் கேட்ட வெட்டுக்கிளி சிரித்தபடியே," குளிர் காலத்தை நினைத்து ஏன் இப்போது நீ கவலைப்படுகிறாய்? அப்போது நமக்கு நிறைய உணவு கிடைக்கும்" என்று தொடர்ந்து விளையாட ஆரம்பித்தது, ஆனால் எறும்பு கடுமையாக உழைத்தது.

குளிர்காலம் வந்தது, வெட்டுக்கிளிக்கு சாப்பிட தானிய உணவு கிடைக்கவில்லை. பட்டினி கிடந்ததால் வெட்டுக்கிளி பலவீனமானது. எறும்பு கடினமாக உழைத்ததால் அதற்கு சாப்பிட உணவு இருந்ததை நினைத்து தனது முட்டாள்தனத்தை வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி : காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

9.Always Stay Alert

Once upon a time, there was a lion that grew so old that he was unable to kill any prey for his food. So, he said to himself, I must do something to stay my stomach else I will die of starvation. An idea appears in the mind of lion.

He decided to lie down in the cave pretending to be ill and then who-so-ever will come to inquire about his health, will become his prey. The lion put his wicked plan into practice and it started working. Many fell prey to the lion. But the plan did not stand.

One day, a fox came to visit the ailing lion. As foxes are clever by nature, the fox stood at the mouth of the cave and looked about. His sixth sense worked and he came to know the reality.

So, he called out to the lion from outside and said, How are you, sir?. The lion replied, I am not feeling well at all. But why don't you come inside?. Then the fox replied, "I would love to come in, sir! But on seeing all footprints going to your cave and none coming out, I would be foolish enough to come in". Saying so, the fox went to forest to alert the other animals.

Moral: Always keep your eyes open and stay alert before walking in any situation.

எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்

ஒரு காட்டில், ஒரு சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த சிங்கத்திற்கு வயதானதால் எந்த விலங்குகளையும் வேட்டையாட முடியவில்லை. தன் வயிற்றை காப்பாற்ற தான் எதாவது செய்ய வேண்டும் இல்லையெனில் பட்டினியால் இறந்துவிடக்கூடும் என்று சிங்கம் தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. சிங்கத்தின் மனதில் ஒரு யோசனை தோன்றியது.

சிங்கம் நோயுற்றது போல் குகைக்குள் படுத்துக் கொள்ளத் தீர்மானித்தது, பின்னர் அதனுடைய உடல்நிலையை பற்றி விசாரிப்பதற்கு யாரேனும் வந்தால், சிங்கம் அதனை இரையாக்க முடிவு செய்தது. சிங்கம் தனது பொல்லாத திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, அது செயல்படத் தொடங்கியது. பலரும் சிங்கத்திற்கு இரையாகினர். ஆனால் அத்திட்டம் நிலைக்கவில்லை.

ஒருநாள் நரி நோயுற்ற சிங்கத்தைப் பார்ப்பதற்கு வந்தது. நரிகள் இயற்கையாகவே புத்திசாலித்தனமாக இருப்பதால், நரி குகையின் வாயிலில் நின்று பார்த்தது. அதன் ஆறாவது உணர்வு வேலை செய்தது மற்றும் அது யதார்த்தத்தை அறிந்து கொண்டது.

எனவே, அது வெளியில் இருந்து சிங்கத்தை அழைத்து, "ஐயா! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டது. அதற்கு சிங்கம், "எனக்கு உடல்நிலை சரியில்லை. ஆனால் ஏன் நீ உள்ளே வரவில்லை?" என்று கேட்டது. நரி உடனே, "நான் உள்ளே வர விரும்புறேன், ஐயா! ஆனால் உங்கள் குகைக்குள்ளே செல்லும் கால்தடங்களை பார்த்தால் உள்ளே வந்த எவரும் திரும்பவில்லை, இதை பார்த்தும் குகைக்குள்ளே வர நான் ஒன்றும் முட்டாள் அல்ல", என்று கூறிவிட்டு காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்ய சென்றது.

நீதி : எந்தவொரு சூழ்நிலையிலும் ஏதாவது நடப்பதற்கு முன் எப்போதும் கண்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

10.The Kite without a thread.
Once upon a time, father and son went to the kite flying festival. The son became very happy to seeing the sky filled with colorful kites. He asked his father to get him a kite and a thread with a roller. So, the father went to the shop at the park where the festival was being held. He purchased kites and a roll of thread for his son.

The boy bought it and began to fly the kite. The kite flew to great heights in a short time. The boy was very happy to see it. After a while, the boy felt something .. Looking at his dad and said, "Daddy! This kite is flying at a good height. To fly even higher, this thread is an obstacle. So let's cut this thread". His father said ok, and the thread was cut off from kite.

But then, slowly it fell down. The son was surprised to see this. He asked his father, "Dad! I thought that after cutting off the thread, the kite can freely fly higher. But why did it fall down?".

Father explained his son that "we go to great heights in our lives. Then there are a few things in our lives that we think are disruptive and if we get away from them we can still fly high. But it was wrong. Like this thread, in fact, is no barrier to flying the kite. Instead, the kite was in the air, helping to stay high and not fall down. When the thread broke away from kite, it fell back from its position. Similarly, we should not forget the status that we crossed, no matter how high we go in our lives".

The son realized his mistake.

நூல் இல்லாத காத்தாடி

ஒரு முறை ஒரு தந்தையும் மகனும் காத்தாடி விடும் திருவிழாவிற்குச் சென்றனர். வண்ணமயமான காத்தாடிகளால் வானம் நிரம்பியிருப்பதைக் கண்டு மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது தந்தையிடம் ஒரு காத்தாடி மற்றும் ஒரு நூல் கண்டை வாங்கி வரச் சொன்னான். எனவே, திருவிழா நடைபெறும் பூங்காவில் உள்ள கடைக்கு தந்தை சென்றார். அவர் தனது மகனுக்காக காத்தாடிகளையும் ஒரு நூல் கண்டையும் வாங்கினார்.

அதை வாங்கிக் கொண்டு அந்த பையன் காத்தாடியை பறக்க விட ஆரம்பித்தான். அந்த காத்தாடி சிறுது நேரத்தில் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பறந்தது. அதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான் அந்த பையன். சிறுது நேரம் கழித்து அந்த பையனுக்கு ஏதோ ஒரு எண்ணம் தோன்ற.. தன் அப்பாவை பார்த்து, "அப்பா! இந்த காத்தாடி நல்ல உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் உயரமாக பறக்க, இந்த நூல் தடையாக உள்ளது. எனவே இந்த நூலை நாம் அறுத்து விடலாம்" என்றான். அவனது அப்பாவும் சரி என்று கூறி அந்த நூலை காத்தாடியில் இருந்து அறுத்து விட்டார்.

சிறுது நேரத்தில், அது கீழே விழுந்தது. இதை பார்த்த அந்த பையன் ஆச்சரியப்பட்டான். உடனே அந்த பையன் தன் அப்பாவைப் பார்த்து, "அப்பா! காத்தாடிக்கு இடையூறாக இருந்த நூலை அறுத்து விட்டால், அது இன்னும் உயர பறக்கும் என நினைத்தால், அது மாறாக கீழே விழுந்து விட்டதே.. ஏன்? என்று கேட்டான்.

அதற்கு அப்பா, "மகனே! நம்முடைய வாழ்வில் நாம் மிகப்பெரிய உயரத்திற்கு செல்கிறோம். அதன்பிறகு நம் வாழ்வில் ஒரு சில விஷயங்கள் நமக்கு இடையூறாக உள்ளது என நினைத்து, அவற்றை விட்டு விலகி விட்டால் நாம் இன்னும் உயர பறக்கலாம் என நினைக்கிறோம். ஆனால் அது தவறு. அதைப்போலத் தான் இந்த நூலும், உண்மையில் அந்த நூலானது அந்த காத்தாடி உயர பறக்க தடையாக இல்லை. மாறாக அந்த காத்தாடி காற்றின் வேகத்தில், மாட்டி கீழே விழாமல், உயரத்தில் இருப்பதற்கு உதவியாக இருந்தது. அந்த நூல் காத்தாடியை விட்டு பிரிந்ததும் அது தன் நிலையில் இருந்து கிழே விழுந்து விட்டது. இதுபோலத்தான் நாமும் நமது வாழ்வில் எந்த உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த நிலையை மறக்க கூடாது என்றார்.

இதை கேட்டபின் அந்த மகன் தனது தவறை உணர்ந்தான்.

11.The greedy cat
Once upon a time, a cat was wandering in search of food. While wandering, it saw a big drum lying under a tree in a field. The cat thought that there might be some other small animal inside the drum that would make a tasty meal for her.

The cat tried to open the drum but it was too tough to tear off. The cat thought of a plan and began to beat the drum with both her front paws. A dog attracted towards the sound, came near it.
The cat said to the dog, "There is some animal hiding inside the drum. Can you tear off the top of the drum and catch that prey?". The dog was himself hungry. So, he hit the top of the drum with his heavy paws.

The drum opened, but there was no animal inside. The dog became very angry and said to the cat, "You have wasted my time. There is no food inside the drum. So I will kill and eat you". The dog pounced upon the cat, killed and ate it.

Moral : Greed is always harmful.

பேராசை கொண்ட பூனை

ஒரு முறை பூனை ஒன்று உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. அலைந்துகொண்டிருக்கும் போது, அது ஒரு வயலில் உள்ள ஒரு மரத்தின் கீழ் ஒரு முரசை பார்த்தது. பூனை அதனுள்ளே வேறு ஒரு சிறிய விலங்கு இருக்கலாம் என்று எண்ணி, அது தனக்கு ஒரு சுவையான உணவை உண்டாக்கும் என நினைத்தது.

பூனை முரசை திறக்க முயன்றது, ஆனால் அதை கிழிக்க மிகவும் கடினமாக இருந்தது. பூனை ஒரு திட்டத்தை தீட்டி, தனது முன்னங்கால்களால் முரசை அடிக்க ஆரம்பித்தது. ஒரு நாய் அந்த ஒலியால் கவரப்பட்டு அதனருகில் வந்தது.

பூனை நாயிடம், "முரசின் உள்ளே சில விலங்கு மறைந்து உள்ளது, நீங்கள் முரசை கிழித்து அந்த இரையை பிடிக்க முடியுமா?" என்று கேட்டது. நாயும் பசியுடன் இருந்தது. எனவே, அது முரசை தன் கடினமான பாதங்களால் அடித்தது.

முரசு திறக்கப்பட்டது, ஆனால் உள்ளே எந்த விலங்கும் இல்லை. நாய் மிகவும் கோபமுடன், பூனையைப் பார்த்து, "நீ என் நேரத்தை வீணாக்கி விட்டாய். முரசின் உள்ளே உணவு இல்லை. எனவே, நான் உன்னை கொன்று சாப்பிடுவேன்" என்று சொன்னது. நாய், பூனை மீது பாய்ந்து அதனை கொன்று தின்றது.

நீதி : பேராசை எப்போதும் தீங்கு விளைவிக்கும்.

12.Choose Your Words Wisely
Once upon a time, an old man spread rumors that his neighbor was a thief. As a result, the young man was arrested. Days later, the young man was proven innocent. After being released, the young man felt humiliated as he walked to his home. He sued the old man for wrongly accusing him.

Case has come for judgement. In court, the old man told the Judge, "They were just comments, didn't harm anyone.." The judge told the old man, "Write all the things you said about him on a piece of paper. Tear them up and on the way home, throw the pieces of paper separately. Tomorrow, come back to hear the sentence".

The next day, the judge told the old man, "Before receiving the sentence, you will have to go out and gather all the pieces of paper that you threw out yesterday". The old man said, "I can't do that! The wind must have spreads them and I won't know where to find them".

The judge then replied, "The same way, simple comments may destroy the honor of a man to such an extent that one is not able to fix it". The old man realized his mistake and asked for forgiveness.

Moral: Do not malignant or blame anyone without knowing the fact or a truth. Your words may ruin someone's reputation without any fault of theirs.

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இளைஞர் விடிவிக்கப்பட்டு வீட்டிற்கு சென்ற போது மிகவும் அவமானமாக உணர்ந்தார். தன் மீது தவறாக குற்றம் சாட்டியதற்காக முதியவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு வந்தது. நீதிமன்றத்தில் முதியவர் நீதிபதியிடம் "அவை அனைத்துமே கருத்துக்கள் தான், யார் மனதையும் புண்படுத்த அல்ல" என்று கூறினார். அதற்கு நீதிபதி முதியவரிடம், நீங்கள் அந்த இளைஞனை பற்றி என்ன கூறினீர்களோ அவை அனைத்தையுமே ஒரு துண்டு காகிதத்தில் எழுதுங்கள். துண்டுக் காகிதத்தைக் கிழித்து வீட்டிற்குச் செல்லும் வழியில் தனித்தனியாக எறிந்து விடுங்கள் என்று கூறிவிட்டு, நாளை மறுபடியும் தீர்ப்புக்காக வருமாறு உத்தரவிட்டார்.

அடுத்த நாள், நீதிபதி முதியவரிடம், "தீர்ப்பைப் பெறுவதற்கு முன்னர், நீங்கள் வெளியே சென்று எறிந்த அனைத்து துண்டு காகிதங்களையும் சேகரிக்க வேண்டும்." என்று கூறினார், முதியவர், "என்னால் செய்ய முடியாது! காற்றில் அந்த துண்டு சீட்டுகள் பரவியிருக்கும் அவற்றை எங்கே கண்டுபிடிப்பது என்று எனக்கு தெரியாது" என்று முதியவர் பதிலளித்தார்.

நீதிபதி முதியவரிடம் "அதே போல தான் எளிய கருத்துக்கள் ஒரு மனிதனின் மரியாதையை சரிசெய்ய முடியாத அளவுக்கு அழிக்கக்கூடும்" என்று கூறினார். முதியவரும் தன்னுடைய தவறை உணர்ந்து அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டார்.

நீதி : உண்மையை தெரிந்துக் கொள்ளாமல் ஒருவரை பழிக்கக் கூடாது. உங்களுடைய வார்த்தைகள் தவறுதலாக யாருடைய நற்பெயரையாவது அழிக்கக்கூடும்.

13.Three Types of People
A teacher shows three toys to a student and asks the student to find out the differences. All the three toys are seemed to be identical in their shape, size. After keen observation, the student observes holes in the toys. The 1st toy has holes in the ears. The 2nd toy has holes in ear and mouth. The 3rd toy has only one hole in one ear.

Then the student puts the needle in the ear hole of the 1st toy. The needle comes out from the other ear. In the 2nd toy, when the needle was put in the ear, the needle came out of a mouth. And in the 3rd toy, when the needle was put in the toy, it did not come out. By this teacher decided to teach a concept to the students.

The first toy represents those people around you who gives an impression that they are listening to you, so be careful while you are speaking with this type of people around you.

The second toy represents those people who listen to you all your things, will use your words and tell others against you. It will bring issues.

The third toy represents some kinds of people will keep the trust you have in them. They are the ones who you can count on.

Moral : Always stay in a company of a people who are loyal and trustworthy.


மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப் பிறகு, மாணவர்கள் பொம்மைகளில் உள்ள துளைகளை கவனித்தனர். முதல் பொம்மையின் காதுகளில் துளைகள் இருந்தன. 2 வது பொம்மையின் காது மற்றும் வாயில் துளைகள் இருந்தன. 3 வது பொம்மையின் ஒரே காதில் ஒரே ஒரு துளை இருந்தன.

பின்னர் மாணவர்கள் ஊசியை முதலாவது பொம்மையின் ஒரு காது வழியாக விட்டு மற்றொரு காது வழியாக எடுத்தனர், ஊசியை இரண்டாவது பொம்மையின் காது வழியாக விட்டு வாய் வழியாக வெளியே எடுத்தனர். மூன்றாவது பொம்மையில் ஊசியை விட்ட போது அது வெளிவரவில்லை. இதை வைத்து ஆசிரியர் மாணவரக்ளுக்கு ஒரு கருத்தை புரியவைக்க நினைத்தார்.

பின்பு ஆசிரியர் மாணவர்களிடம், முதல் பொம்மை உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் குறிக்கிறது, அவர்கள் உங்களுக்குச் செவிசாய்க்கிறார்கள் என்ற எண்ணத்தைத் தருகிறார்கள், எனவே உங்களைச் சுற்றியுள்ள இந்த வகை மக்களுடன் பேசும்போது கவனமாக இருங்கள்.

இரண்டாவது பொம்மை, நீங்கள் சொல்வதை கேட்கும் மக்கள் உங்கள் வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களிடம் தவறான கூற்றை தெரிவிக்கலாம், இதனால் இருபாலரிடையே பிரச்சனைகள் கூட ஏற்படலாம் என்ற கருத்தை தெரிவிக்கிறது.

சிலவகையான மக்கள் உங்களின் நம்பக தன்மையை காப்பாற்றுவார்கள். அவர்களே நீங்கள் நம்பக்கூடியவர்கள் என்ற கருத்தை மூன்றாவது பொம்மை தெரிவிக்கிறது.

நீதி : எப்போதும் விசுவாசமும் நம்பிக்கையும் உள்ளவர்களையே துணையாக வைத்திருங்கள்.

14.The boy who cried wolf
Once upon a time, there lived a shepherd boy in a village. While he was watching his flock of sheep in the hill, he thought of playing the villagers. Immediately he shouted, "Wolf! Wolf! The sheep are being chased by the wolf!". The villagers came running to help the boy and save the sheep. They found nothing and the boy just laughed by looking at their angry faces. The villagers understand the game played by the boy and left him.

After a while he started to shout again. The villagers thinking and left if the wolf had actually arrived. But the wolf did not get there, and the villagers again reprimanded the boy and left. The boy continued watching the work. After a while, he saw a real wolf and cried loudly, "Wolf! Please help! The wolf is chasing the sheep. Help!" But this time, no one turned up to help.

By evening, when the boy didn't return home, the villagers wondered what happened to him and went up the hill. The boy sat on the hill weeping. "Why didn't you come when I called out that there was a wolf?", he asked angrily. The flock is scattered now, he said.

A villager approached him and said, People won't believe liars even when they tell the truth. Let's go home now.Moral: Lying breaks trust. Nobody trusts a liar, even when he is telling the truth.


ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே "ஓநாய்.. ஓநாய.. ஆடுகளை ஓநாய் துரத்துகிறது!" என கூச்சலிட ஆரம்பித்தான். சிறுவனுக்கு உதவவும் ஆடுகளை காப்பாற்றவும் கிராம மக்கள் ஓடி வந்தனர். அவர்கள் எதையும் அங்கு கணவில்லை, சிறுவன் அவர்களின் கோபமான முகங்களைப் பார்த்து சிரித்தான். சிறுவன் விளையாடிய விளையாட்டை கிராம மக்கள் புரிந்துகொண்டு அவனை விட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.

சற்று நேரம் கழித்து மீண்டும் கூச்சலிட ஆரம்பித்தான். கிராமவாசிகள் உண்மையாகவே ஓநாய் வந்துவிட்டதோ என நினைத்து சென்றனர். ஆனால் ஓநாய் அங்கு வரவில்லை, கிராமவாசிகள் சிறுவனை மீண்டும் கண்டித்து விட்டு சென்றனர். சிறுவனும் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான். சற்றும் எதிர்பாராமல் ஓநாய் அங்கு வந்துவிட்டது. சிறுவனும் பயந்து போய் "ஓநாய்! தயவுசெய்து உதவுங்கள்! ஓநாய் ஆடுகளைத் துரத்துகிறது. உதவுங்கள்!" என்று கத்த, இந்த முறை அவனுக்கு உதவ யாரும் வரவில்லை.

அந்தி சாய சிறுவன் வீட்டுக்கு வராததை கண்ட கிராமவாசிகள் அவனைத் தேடி மலைக்குச் சென்றனர். சிறுவன் அங்கு அழுது கொண்டிருப்பதைக் கண்ட கிராமவாசிகள் அவன் அருகே சென்றனர. சிறுவன் கிராமவாசிகளிடம் ஓநாய் வந்தது என்று கத்திய போது ஏன் யாரும் வரவில்லை என்று கோபத்துடன் கேட்டான். "இப்போது பாருங்கள், ஆடுகள் அனைத்தும் இல்லை", என்று கூறினான்.

ஒரு கிராமவாசி சிறுவனை அணுகி, "மக்கள் உண்மையைச் சொல்லும்போது கூட பொய்யர்களை நம்ப மாட்டார்கள். இப்போது வீட்டிற்கு செல்லலாம", என்று கூறினார்.

நீதி : பொய் நம்பிக்கையை உடைக்கிறது, பொய் கூறுபவர் உண்மையைச் சொல்லும் போது யாரும் நம்பமாட்டார்கள்.

15.The Foolish Crane
One day, a crane felt hungry. So, he came out of his nest to look for food. The crane went to the river to catch fish and was waiting for the fish. He stood by the river and saw enough fish to eat.

He pounced on the fish and caught it. But then, the fish was small, it was not enough and left off the small fish, hoping to catch the big fish.

Then again saw a small fish and he let it go, thinking that the small fish would not fill his belly. This way he caught many small fish, but let all of them go off and waiting for the big fish.

By sunset, the crane had not caught any big fish. He slowly began to feel tired. At the end he remained empty stomach and thought, All those small fish, together would have filled up my belly, but now it was too late. He remained hungry that day.

MORAL : A small fish in hand is worth than a big fish in the water.

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது.

நாரை ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த மீனை பிடித்தது. மீன் சிறியதாக இருந்ததால் தனக்கு போதாது, பெரிய மீனை பிடித்துவிடலாம் என நினைத்து அந்த சிறிய மீனை விட்டுவிட்டது.

மீண்டும் ஒரு சிறிய மீனைக் கண்டது, அந்த சிறிய மீன் தனது வயிற்றை நிரப்பாது என்று நினைத்துக் கொண்டு அதையும் விட்டுவிட்டது. அந்த வழியில் வந்த பல சிறிய மீன்களை விட்டுவிட்டு பெரிய மீன் வரும் வரை காத்துக் கொண்டிருந்தது.

சூரியன் அஸ்தமனம் வரை, நாரைக்கு எந்த பெரிய மீனும் கிடைக்கவில்லை. நாரை மெதுவாக சோர்வடைய ஆரம்பித்தது. கடைசியில் நாரை வெறும் வயிற்றில் இருந்துகொண்டு, அந்த சிறிய மீன்கள் அனைத்தும் சேர்ந்து என் வயிற்றை நிரப்பியிருக்கும், ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது என்று நினைத்து பசியுடன் இருந்தது.

நீதி : தண்ணீரில் இருக்கும் பெரிய மீனை விட கையில் இருக்கும் சிறிய மீன் பெரு மதிப்புடையது.

16.The boy who cried wolf
Once upon a time, there lived a shepherd boy in a village. While he was watching his flock of sheep in the hill, he thought of playing the villagers. Immediately he shouted, "Wolf! Wolf! The sheep are being chased by the wolf!". The villagers came running to help the boy and save the sheep. They found nothing and the boy just laughed by looking at their angry faces. The villagers understand the game played by the boy and left him.

After a while he started to shout again. The villagers thinking and left if the wolf had actually arrived. But the wolf did not get there, and the villagers again reprimanded the boy and left. The boy continued watching the work. After a while, he saw a real wolf and cried loudly, "Wolf! Please help! The wolf is chasing the sheep. Help!" But this time, no one turned up to help.

By evening, when the boy didn't return home, the villagers wondered what happened to him and went up the hill. The boy sat on the hill weeping. "Why didn't you come when I called out that there was a wolf?", he asked angrily. The flock is scattered now, he said.

A villager approached him and said, People won't believe liars even when they tell the truth. Let's go home now.

Moral: Lying breaks trust. Nobody trusts a liar, even when he is telling the truth.

>ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே "ஓநாய்.. ஓநாய.. ஆடுகளை ஓநாய் துரத்துகிறது!" என கூச்சலிட ஆரம்பித்தான். சிறுவனுக்கு உதவவும் ஆடுகளை காப்பாற்றவும் கிராம மக்கள் ஓடி வந்தனர். அவர்கள் எதையும் அங்கு கணவில்லை, சிறுவன் அவர்களின் கோபமான முகங்களைப் பார்த்து சிரித்தான். சிறுவன் விளையாடிய விளையாட்டை கிராம மக்கள் புரிந்துகொண்டு அவனை விட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.

சற்று நேரம் கழித்து மீண்டும் கூச்சலிட ஆரம்பித்தான். கிராமவாசிகள் உண்மையாகவே ஓநாய் வந்துவிட்டதோ என நினைத்து சென்றனர். ஆனால் ஓநாய் அங்கு வரவில்லை, கிராமவாசிகள் சிறுவனை மீண்டும் கண்டித்து விட்டு சென்றனர். சிறுவனும் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான். சற்றும் எதிர்பாராமல் ஓநாய் அங்கு வந்துவிட்டது. சிறுவனும் பயந்து போய் "ஓநாய்! தயவுசெய்து உதவுங்கள்! ஓநாய் ஆடுகளைத் துரத்துகிறது. உதவுங்கள்!" என்று கத்த, இந்த முறை அவனுக்கு உதவ யாரும் வரவில்லை.

அந்தி சாய சிறுவன் வீட்டுக்கு வராததை கண்ட கிராமவாசிகள் அவனைத் தேடி மலைக்குச் சென்றனர். சிறுவன் அங்கு அழுது கொண்டிருப்பதைக் கண்ட கிராமவாசிகள் அவன் அருகே சென்றனர. சிறுவன் கிராமவாசிகளிடம் ஓநாய் வந்தது என்று கத்திய போது ஏன் யாரும் வரவில்லை என்று கோபத்துடன் கேட்டான். "இப்போது பாருங்கள், ஆடுகள் அனைத்தும் இல்லை", என்று கூறினான்.

ஒரு கிராமவாசி சிறுவனை அணுகி, "மக்கள் உண்மையைச் சொல்லும்போது கூட பொய்யர்களை நம்ப மாட்டார்கள். இப்போது வீட்டிற்கு செல்லலாம", என்று கூறினார்.

நீதி : பொய் நம்பிக்கையை உடைக்கிறது, பொய் கூறுபவர் உண்மையைச் சொல்லும் போது யாரும் நம்பமாட்டார்கள்.

17.The Hidden Treasure
A farmer had five sons. They were all lazy. The farmer wanted to see them as hard-working young men. He was worried about their future.

One day he fell ill. He was on his death-bed. He called his sons and told them that there was a treasure hidden in his fields. He passed away the same day.

The sons went to the fields. They dug up every inch of the fields but they did not find the hidden treasure. After a few days, it rained heavily. Someone advised them to sow seeds in the fields. They did the same.

They got good profit from the crop and they became rich. Now they understood the value of hard work. They got the hidden treasure from the fields in the form of grown crops.

Moral: No pains no gains.

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டார்.

ஒரு நாள் அவர் நோய்வாய்ப்பட்டு, மரணபடுக்கையில் இருந்தார். தன் மகன்களை அழைத்து, அவரின் நிலங்களில் ஒரு புதையலை மறைத்து வைத்திருப்பதாக சொன்னார். அன்றே அவரும் இறந்தும் போனார்.

மகன்கள் வயல்களுக்குப் போனார்கள். அவர்கள் நிலங்களை ஒவ்வொரு அங்குலமாக தோண்டினார்கள், ஆனால் அவர்களால் மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பிறகு, அங்கே அதிக மழை பெய்தது. யாரோ ஒருவர் விதைகளை விதைக்க அவர்களுக்கு அறிவுரை கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

விதைத்த பயிற்றில் இருந்து நல்ல இலாபம் கிடைத்து, அவர்கள் பணக்காரர் ஆனார்கள். இப்போது கடின உழைப்பின் மதிப்பை அவர்கள் புரிந்துகொண்டார்கள். வளர்ந்த பயிர்களின் வடிவில் அவர்கள் மறைந்த புதையலை கண்டெடுத்தனர்.

நீதி : உழைப்பில்லாமல் ஊதியமில்லை.

18.Whose fault?
A mouse and a frog were friends. Every morning the frog would hop out of his pond and go to visit his friend.

Mouse asked frog to teach swimming to it. Frog accept its request. One day the frog tied one end of a string around its own leg, tied the other end to the mouse leg.

Then the eagle which was flying over looked at them and came to attack them. Frog immediately fell into the water with the mouse to save its life. The mouse which drowned in water was dead. While its body was floating above, its legs were tied along with the frog.

At that time, the eagle saw the mouse floating on the water and came down to pick the mouse and flied over. Even the frogs tied together with the frog was also clutched by the eagle.

Moral: We should think their worth before we select someone as friend.





தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும்.

எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம் கேட்டது. தவளை அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. ஒரு நாள், தவளை கயிற்றின் ஒரு முனையை தன் காலுடன் சேர்த்து கட்டிக்கொண்டு மற்றொரு முனையை எலியின் கால்களில் கட்டியது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று, இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக எலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய எலி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம் தண்ணீரின் மீது எலி மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் கழுகின் பிடியில் சிக்கியது.

நீதி: நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும்.

19.Act Wisely
Three fish were very close friends in a village pond. One day, some fishermen passing through that pond saw plenty of fishes. One of the fisherman said, "hey look here, so many fishes in this pond! It is already evening now. We should come tomorrow morning and catch them all".

Hearing the fisherman, one of the three fishes, who was the wisest of them all called the other two fishes and said, "Did you hear what the fisherman said? We should leave this pond tonight itself, and move to a safe place quickly".

The second fish agreed to him and said, "I think we should not be here anymore". But the third fish started laughing for what both fishes said. It replied, "This is our home. We should not run away like this".

Unable to convince the third fish, the other two left the pond that night. The next day, the fishermen put a big net in that pond and caught a plenty of fishes. Third fish was one among them. If it had listened to other two fishes, it wouldn't have been caught like that.

Moral : Think and act wisely to avoid problem.

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய மீன்கள் இருப்பதை கண்டனர். அவர்களில் ஒரு மீனவர், "இங்கே பாருங்கள்! இந்த குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன! இப்போது மாலை நேரம் ஆகிவிட்டது. நாம் நாளை காலை வந்து அனைத்து மீன்களையும் பிடிக்க வேண்டும்" என்று சொன்னார்.

மீனவர் சொன்னதை கேட்ட, மூன்று மீன்களில் ஒரு புத்திசாலி மீன், மற்ற இரண்டு மீன்களையும் அழைத்து, "மீனவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேட்டீர்களா? இன்றிரவு இந்த குளத்தில் இருந்து வெளியேறி, விரைவாக ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்", என்று சொன்னது.

இரண்டாவது மீன் அதனை ஏற்றுக்கொண்டு, "நாம் இனி இங்கே இருக்க வேண்டாம்" என்று சொன்னது. ஆனால் மூன்றாவது மீன் மற்ற இரு மீன்களும் சொன்னதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தது. "இது தான் நம்முடைய வாழ்விடம், நாம் இங்கிருந்து வேறு எங்கும் ஓடக்கூடாது", என்றது.

மூன்றாவது மீனை சமாதானப்படுத்த முடியாமல், மற்ற இரு மீன்களும் அந்தக் குளத்தில் இருந்து அன்றிரவே வெளியேறின. அடுத்த நாள், மீனவர்கள் அந்த குளத்தில் ஒரு பெரிய வலையை விரித்து நிறைய மீன்களை பிடித்தனர். மூன்றாவது மீன் மற்ற மீன்கள் சொன்னதை கேட்டிருந்தால், அது அப்படி பிடிபட்டிருக்காது.

நீதி: சிந்தித்து, புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும்.

20.This was bound to happen
Once a highly successful businessman, running a health insurance company was getting ready to go to his office. When he reached into his car and opened a door, a dog sleeping under his car suddenly came out and bit on his leg!. The businessman got very angry and quickly picked up a few rocks and threw at the dog. The dog ran away.

Upon reaching his office, the businessman calls a meeting of his managers and during the meeting he shows the anger of dog on them. The managers also get upset by the anger of their boss and they shows their anger to the employees working under them. The chain of this reaction keeps going till the lower level of employees and finally, the anger reaches to the office peon.

Now, there was no one working under the peon. So, after the office time is over, he reaches his home, and wife opens the door. She asked him, "Why are you so late today?" The peon shows his anger on his wife.

So, now the wife got upset that she got a scolding for no reason. She shows her anger on his son who was watching tv.

The son gets upset now! He walks out of his house and sees a dog passing by looking at him. He picks up a rock and hits the dog with anger and frustration. The dog, getting hit by a rock, runs away and barking in pain.This was the same dog that bite the businessman early morning.

Moral: Do good, good will come. Do bad, bad will come.


அரம்பித்த இடத்திலேயே முடியும்!

தொழிலதிபர் ஒருவர், மருத்துவ காப்பீடு நிறுவனம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தார். ஒருநாள் அலுவலகத்திற்கு செல்ல அவர் தயாராகிக்கொண்டிருந்தார். அலுவலகத்திற்குச் செல்ல மகிழுந்துவில் ஏற கதவைத் திறந்தபோது, அவருடைய மகிழுந்துவின் கீழ் தூங்கிக்கொண்டிருந்த ஒரு நாய் திடீரென்று அவரது காலைக் கடித்துவிட்டது. தொழிலதிபர் கோபமடைந்து அருகில் இருந்த கற்களை எடுத்து நாயை அடித்தார். நாய் ஓடிவிட்டது.

அவர் அலுவலகத்தை அடைந்தவுடன், தொழிலதிபர் தனது மேலாளர்களுடனான சந்திப்பின் போது நாய் மீது இருந்த கோபத்தை, மேலாளர்கள் மீது காட்டினார். அவர்கள் தங்கள் கோபத்தை தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் மீது காட்டினார்கள். இந்த கோபம் கீழுள்ள பணியாளர்கள் மீது சென்று கொண்டே இருந்தது. இறுதியில் அலுவலக உதவியாளரிடம் சென்றது. அவருக்கு கீழ் யாரும் இல்லாததால், அவரால் அந்த கோபத்தை யாரிடமும் காட்ட முடியவில்லை.

பணியாள் வீட்டை அடைந்த போது, "ஏன் தாமதமாக வந்தீர்கள்?" என்று கேட்ட மனைவியிடம் கோபத்தைக் காட்டினான்.

இப்போது மனைவி எந்த காரணத்திற்காக தன் கணவன் அவளை திட்டினான் என்பதை அறியாமல், டிவி பார்த்துக் கொண்டிருந்த தன் மகனிடம் அந்த கோபத்தைக் காட்டினாள்.

மகன் மிகவும் வருந்தி, வீட்டை விட்டு வெளியே சென்றான். அவன் வழியில், ஒரு நாய் கடந்து செல்வதை பார்த்தான், அவன் ஒரு கல்லை எடுத்து தனது கோபத்திலும், விரக்தியிலும் நாயைத் தாக்கினான். நாய் கல்லால் தாக்கப்பட்டு, வலியால் குரைத்து ஓடியது.

அந்த நாய் தான் காலையில் தொழிலதிபரை கடித்த நாய்.

நீதி : நன்மை செய்தால் நன்மை விளையும், தீமை செய்தால் தீமை விளையும்.

21
ggg































No comments:

Post a Comment